சிவன்மலை தேர்த்திருவிழா கடைகள் உரிமம் ரூ.8 லட்சத்திற்கு ஏலம்

சிவன்மலை தேர்த்திருவிழா கடைகள் உரிமம் ரூ.8 லட்சத்திற்கு ஏலம்

Update: 2023-01-18 14:14 GMT

காங்கயம்,

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள புகழ் பெற்ற சுப்பிரமணிய சாமி கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி தொடங்கி 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவிழாவிற்கான தற்காலிக கடைகள் மற்றும் கேளிக்கை அரங்குகளுக்கு ஆயம் வசூல் செய்யும் உரிமத்துக்கான ஏலம் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் விமலாதேவி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கடந்த முறை ஏலம் போன ரூ.7 லட்சத்து 98 ஆயிரத்து 700-க்கு குறைந்துபட்ச தொகையாக அளவிடப்பட்டு ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 100, 100 ரூபாயாக அதிகரித்து ஏலம் கேட்டனர். இறுதியாக காங்கயம் அருகே சிவன்மலை பகுதியைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் ரூ.8 லட்சத்து 500-க்கு ஏலம் எடுத்தார். இதற்கு அதிகமாக வேறு யாரும் ஏலம் கோராததால், மேற்கண்ட ஏலத்தொகை இறுதி செய்யப்பட்டு ஏலம் நிறைவு பெற்றது. இது கடந்த முறையை விட, ரூ.1,800 மட்டுமே அதிகரித்து ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. இந்த ஏலத்தொகைக்கு வருமான வரியாக ஒரு சதவீதமும், சரக்கு மற்றும் சேவை வரியாக 2 சதவீதமும் சேர்த்து செலுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்