சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

Update: 2023-04-29 19:04 GMT

சிவகாசி, 

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பத்திரகாளியம்மன்

சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைபண்டுக்கு சொந்தமான ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலின் ராஜகோபுரம் சுமார் 110 அடி உயரம் கொண்டது.

கோவில் கருவறையில் அம்மன் 8 திருக்கரங்களுடன் கைகளில் உடுக்கை, கபாலம், சூலம், ஹஸ்தம், நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறார்.

சித்திரை பொங்கல்

சித்திரை பொங்கல் திருவிழா நாளை மறுதினம் (2-ந்தேதி) செவ்வாய்கிழமை இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

11 நாள் நடைபெறும் சித்திரை பொங்கல் விழாவில் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் வான வேடிக்கைக்கு பின்னர் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. வருகிற 9-ந்தேதி 8-ம் நாள் திருவிழாவாக பொங்கல் விழா நடக்கிறது. 10-ந்தேதி 9-ம் நாள் திருவிழாவின் போது கயிறுகுத்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 12-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்