சிவகங்கை புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-09-06 20:15 GMT

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி, செட்டிகுறிச்சி பகுதியில் சாலை மிக குறுகலாக உள்ளது. இந்த சாலையில் சிலர் வாகனஓட்டிகளுக்கு இடையூறாக தங்களுடைய வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிமலன், எஸ்.புதூர், சிவகங்கை.

வரத்துக்கால்வாய் சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலான மழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பருவ மழை தொடங்கும் முன்பாக கண்மாய்களுக்கு வரும் வரத்துக்கால்வாய்களை சீரமைத்தால் மழைநீரை சேகரிக்கும் முடியும். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வரத்துக்கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், எஸ்.புதூர், சிவகங்கை

வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதியில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதி அடைகின்றனர். எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம், தேவகோட்டை, சிவகங்கை.

அடிப்படை வசதி

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியை சுற்றி சுமார் 150 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் மேம்பட்ட பஸ் நிலையம், மருத்துவமனை, சாலை வசதி, அரசு கல்லூரிகள், வேலை வாய்ப்பு உள்ளிட்ட வசதிகள் இல்லை. இதனால் இப்பகுதியினர் அடிப்படை வசதியின்றி அவதியடைகின்றனர். எனவே இப்பகுதிக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெட்சிணாமூர்த்தி, கல்லல், சிவகங்கை.

கண்மாய் தூர்வாரப்படுமா?

சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமம் அடியனேந்தல் கண்மாயை தூர்வாரி மடைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. கண்மாயை தூர்வாருவதன் மூலம் தண்ணீரை தேக்கி விவசாயம், வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். எனவே கண்மாயை தூர்வாரி மடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன், பனங்குடி, சிவகங்கை.

Tags:    

மேலும் செய்திகள்