ஓடும் பஸ்சில் பெண்களிடம் பர்சு திருடிய சகோதரிகள் கைது
கருங்கலில் ஓடும் பஸ்சில் பெண்களிடம் பர்சு திருடிய சகோதரிகள் கைது
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்சன். இவருடைய மனைவி மரிய ரோஸ்லெட் (வயது40). இவர் தனது தாயார் ஏஞ்சல் மேரியுடன் கருங்கலில் இருந்து இரையுமன்துறைக்கு செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது 2 பெண்கள் அவர்களது பையில் இருந்த பர்சுகளை திருடினர். இதைபார்த்த பயணிகள் 2 பெண்களையும் கையும், களவுமாக பிடித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சி கொங்கை பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயன் மகள்கள் முத்தம்மாள் (21), பஞ்சவர்ணம் (19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.