ஒற்றைத் தலைமை விவகாரம்: சேலத்தில் பழனிசாமி ;அ.தி.மு.க. அலுவலகத்தில் ஓ.பன்னீர் செல்வம்!

எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-16 09:38 GMT

சென்னை

சென்னை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். சென்னையில் உள்ள தனது வீட்டில் நிர்வாகிகளுடன் ஒற்றைத் தலைமை குறித்த தனது வீட்டில் 3 நாட்களாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். வரும் போது நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து ஓ,பன்னீஎ செல்வம் ஆலோசனை நடத்தினார். வைத்திலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், தர்மர், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், செம்மலை, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் எந்த பிளவும் இல்லை, கட்சி நகமும் சதையும் போல் உள்ளது. திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும்.

ஒற்றை தலைமை குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். கட்சியின் நிலைப்பாடு தான் என் நிலைப்பாடு.ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஒற்றுமையாக உள்ளனர் என கூறினார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். தமிழகத்தின் தற்போதைய சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று ஆலோசித்தோம். அனைத்து விஷயங்களையும் வெளிப்படையாக பேசிட முடியாது என கூறினார்.

முன்னதாக அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர் .முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர்.

பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முடிக்கப்பட்டு மூத்த நிர்வாகிகள் சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்."ஓ.பன்னீர் செல்வதால் வருவதால் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொள்ளவில்லை.

பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என ஜெயக்குமார் கூறினார்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அவரது காரை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

அ.தி.மு.க.வை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக கட்சி அலுவலகத்தின் வெளியே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்