ஒற்றை தலைமை - 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை

சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2022-06-17 04:47 GMT

சென்னை,

அ.தி.மு.க. செயற்குழு - பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடக்கிறது. இதையொட்டி நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் ஒலித்தது. இது ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை மன வருத்தத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து அவர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து அ.தி.மு.க. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று ஓ.பன்னீர் செல்வம் நேற்று பேட்டியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோருடன் ஆலோசித்து வருகிறார்.

ஒற்றைத்தலைமை பிரச்சினை முடியாத நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டு வருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்றும் ஓ.பி.எஸ் தெரிவித்திருந்தார் . ஒற்றைத்தலைமை பிரச்சினையை உருவாக்கியவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கூறியிருந்தார். ஜெயக்குமார் அளித்த பேட்டியால் ஒற்றைத்தலைமை பிரச்சினை பூதாகரமானது என ஓ.பன்னீர் செல்வம் நேற்று பேட்டி அளித்திருந்தார்.

இதனிடையே திருவண்னாமலை நகர் பகுதியில் ஒற்றை தலைமை ஈபிஎஸ் என அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்