தூத்துக்குடி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோல்

தூத்துக்குடி சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் வெள்ளி செங்கோல் வழங்கி வரவேற்பு அளித்தார்.

Update: 2023-09-04 21:51 GMT

தூத்துக்குடி,

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டம், தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவிலும் கலந்துகொண்டார்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதுக்கோட்டை நல்லமலை பகுதியில் அமைந்துள்ள தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் இல்லத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எஸ்.ஜோயல் வெள்ளி செங்கோல் வழங்கி வரவேற்றார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி எஸ்.ஜோயல் தனது இல்லத்தின் முன்பு 100 அடி உயர கொடி கம்பத்தை நிறுவினார். இந்த கம்பத்தில் தி.மு.க. கொடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி

இந்த நிகழ்ச்சி தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-

துறைமுக நகராம் தூத்துக்குடியின் புதுக்கோட்டை நல்லமலை பகுதியில் தி.மு.க. இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர் சகோதரர் எஸ்.ஜோயலின் இல்லத்துக்கு அருகே கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி 100 அடி உயர கொடிக்கம்பத்தில் மாநில சுயாட்சியின் அடையாளமாக திகழும் தி.மு.க.வின் இருவண்ண கொடியை ஏற்றி வைத்தோம்.

திரளாக திரண்டு ஆரவாரமிக்க வரவேற்பு தந்த தி.மு.க. இளைஞரணியினர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு அன்பும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்