சிதம்பரத்தில்வியாபாரி வீட்டில் 1¾ கிலோ வெள்ளி கொள்ளைமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
சிதம்பரத்தில் வியாபாரி வீட்டில் 1¾ கிலோ வெள்ளி நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் வடக்கு வடுக தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன் மகன் பிரசன்னா (வயது 42). வியாபாரியான இவர் தனது மனைவியுடன் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சம்பவத்தன்று வீட்டுக்கு வந்தார்.
அப்போது, வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ கதவு திறந்து கிடந்தது.மேலும் அதில் இருந்த 4 கிராம் தங்கம், 1¾ கிலோ வெள்ளி மற்றும் ரூ.7 ஆயிரம் ெராக்கம் ஆகியன கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து பிரசன்னா சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.
வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து , கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.