விநாயகர் கோவிலில் வெள்ளிவிழா

Update: 2023-09-05 19:30 GMT

ஓசூர்:-

ஓசூர் அரசனட்டி பாரதிநகரில் விநாயகர் கோவில் அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா பிரம்மோற்சவம் மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். முதல்நாள், கணபதி ஹோமம், குரு பிரார்த்தனை, சாந்தி பூஜை, அக்னி ஜனனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. கலச ஆராதனை, மகா கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், துர்கா ஹோமம், நவகிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின்னர், மகா தீபாராதனை செய்யப்பட்டது.

3-ம் நாள் நிகழ்ச்சியாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும், சதா ருத்ராபிஷேகமும் நடந்தன. தொடர்ந்து ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க மலர்களை கொண்டு விநாயக பெருமானுக்கு லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து மங்கள தீபாராதனை செய்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு மலர் அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்