பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் சிலைகளுக்கு வெள்ளிக்கவசம்

பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் சிலைகளுக்கு கந்தவிலாஸ் நிறுவனம் சார்பில் வெள்ளிக்கவசம் வழங்கப்பட்டது.

Update: 2022-12-29 16:05 GMT

பழனி மேற்கு ரதவீதியில் பழமையான லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்கு சித்திரை திருவிழா, வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட திருவிழாக்கள் மற்றும் சனிக்கிழமைதோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அப்போது பழனி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியில் இருந்தம் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்தநிலையில் பழனி ஸ்ரீகந்தவிலாஸ் நிறுவனம் சார்பில், லட்சுமி நாராயண கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர் சிலைகளுக்கு வெள்ளிக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கந்தவிலாஸ் நிறுவன உரிமையாளர்கள் செல்வக்குமார், நவீஷ்விஷ்ணு, நரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில் இணை ஆணையர் நடராஜனிடம் ரூ.25 லட்சம் மதிப்பிலான 25 கிலோ வெள்ளிக்கவசத்தை வழங்கினர். பின்னர் வெள்ளிக்கவசம் சாமி சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் கலசபூஜை, புண்ணியாக வாஜனம், சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் அழகர், சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் கீதாசுப்புராஜ், மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்