பாலதண்டாயுதபாணிக்கு வெள்ளிக்கவச அலங்காரம்

மார்கழி மாத சஷ்டியையொட்டி நாமக்கல் பாலதண்டாயுதபாணி வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

Update: 2022-12-28 19:00 GMT

நாமக்கல்லில், மோகனூர் சாலையில் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு மார்கழி மாதம் சஷ்டியையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக முருகனுக்கு பால், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் உள்பட 16 பொருட்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வெள்ளிக்கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல் நாமக்கல் கடைவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருக்கும் பாலதண்டாயுதபாணி சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்