தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,247 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2 ஆயிரத்து 983 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.671-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்று பட்டுக்கூடு கிலோவிற்கு ரூ.71 விலை குறைந்தது. அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.600-க்கும், குறைந்தபட்சமாக ரூ.350-க்கும், சராசரியாக ரூ.493.71-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 72 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடந்தது.