ஆராய்ச்சி மாணவர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் இடையே ஆராய்ச்சி மாணவர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Update: 2023-05-11 18:45 GMT


திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலகம் இடையே ஆராய்ச்சி மாணவர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தமிழ்நாடு மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரின் அலுவலகம் சார்பில் மாதிரி ஆராய்ச்சிக்கான பணிநிலையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னிலையில், பல்கலைக்கழகப்பதிவாளர் (பொறுப்பு) சுலோச்சனா சேகர், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை இயக்குனர் சஜ்ஜன்சிங்.சவன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இதுகுறித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாதிரி ஆராய்ச்சிக்கான பணிநிலையம்

இந்த ஒப்பந்தத்தின்படி திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாதிரி ஆராய்ச்சிக்கான பணிநிலையம் அமைக்கப்படும். இந்த பணி நிலையத்தை நிறுவி பராமரிக்கும் பொறுப்பு பல்கலைக்கழக புவியியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும். இது பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருந்து கிடைக்கும் மைக்ரோ டேட்டாவை ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தகவல்களை உள்ளடக்கி வைத்துள்ளது.

ஆராய்ச்சிகளை தொடர வழிவகை செய்யும்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட வழி நடத்தல் குழுவால் அதற்கான முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தால் இந்த வசதியை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தமானது ஆராய்ச்சி மாணவர்கள் தரவுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளவும், ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும். மேலும் மக்கள் தொகையின் சமூக பொருளாதார மற்றும் மக்கள் தொகை பண்புகள் பற்றி நுண்ணறிவுகளை பெற்று ஆராய்ச்சிகளை தொடர வழிவகை செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்