சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம்
கயத்தாறில் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பொதுக்குழு மற்றும் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை மீட்பு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு கயத்தாறு வட்டாரத் தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார். வட்டார இணைச் செயலாளர்கள் முருகேசன், ஜெய குருவம்மாள், துணைத்தலைவர் வெங்கடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் லில்லிமேரிபுஷ்பம் வரவேற்று பேசினார். வட்டாரச் செயலாளர் ஜே.ஆனந்தன் தொடக்க உரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செல்லத்துரை கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் வட்டார தலைவர் மகாராஜன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட பொருளாளர் சுப்பையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முதல்-அமைச்சருக்கு அனுப்பப்படும் மனுவில் அனைவரும் கையெழுத்து போட்டனர். வட்டார பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.