போதைப்பொருட்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

திண்டுக்கல்லில் போதைப்பொருட்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது.

Update: 2023-02-16 19:00 GMT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், போதையற்ற தமிழ்நாடு என்ற தலைப்பில், போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கையெழுத்து இயக்க நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் அஜித் தலைமை தாங்கினார். நகர செயலாளர் பிரேம் வரவேற்றார். பின்னர் மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை பேராசிரியர் பழனித்துரை, திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் கவுன்சிலர் கணேசன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாலர் பாலாஜி மற்றும் நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்