போதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்
போதை பழக்கத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.
தாமரைக்குளம்:
அரியலூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதைக்கு எதிரான கைெயழுத்து இயக்கம் நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருணன், தலைவர் ரவீந்திரன், பொருளாளர் அருண்பாண்டியன், மாணவர் சங்க செயலாளர் குணா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.