கடலூரில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
கடலூரில் போதைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முடிவு செய்தனர். அதன்படி தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள சிங்காரவேலர் சிலை அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இதையடுத்து இளைஞர்களை மீட்போம், போதை இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என்று கூறி வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் அனைவரும் கையெழுத்திட்டனர். இதில் மாவட்ட நிர்வாகிகள் செந்தமிழ் செல்வன், அரசன், ஸ்டீபன் அசோக், மேத்தா சலீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கருப்பையன் நன்றி கூறினார்.