சிறப்பு ஆசிரியர்களுக்கு சைகை மொழி பயிற்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கு சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-06-24 17:26 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படிக்கின்றனர். இவர்களுக்கு சைகை மொழி மூலம் பாடங்களை கற்பிப்பது தொடர்பான பயிற்சி முகாம் திண்டுக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 10-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் 75-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவர்களுக்கு சைகை மொழி பயிற்சியாளர்கள் ரிங்கு நம்தேவ், வேல்முருகன் நெப்போலியன் ஆகியோர் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு பாடங்களை சைகை மொழியை பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்று செயல்முறை விளக்கம் அளித்து பயிற்சி கொடுத்தனர். பயிற்சி முகாமின் நிறைவு நாளான  சைகை மொழி பயிற்சி அளிக்கப்பட்டதுடன், முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதனை உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பதி, செல்வராஜ் ஆகியோர் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்