தூத்துக்குடியில் கண்பாதிக்கப்பட்ட365 உப்பள தொழிலாளர்களுக்கு கண்ணாடி
தூத்துக்குடியில் கண்பாதிக்கப்பட்ட 365 உப்பள தொழிலாளர்களுக்கு கண்ணாடிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடியில் 365 உப்பள தொழிலாளர்களுக்கு மூக்கு கண்ணாடிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
மருத்துவ முகாம்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு, சங்கர நேத்ராலயா ஆகியவை இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பள தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை முடுக்குகாடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ராஜபாண்டிநகர் ஸ்காட் தொடக்கப்பள்ளி, கல்லூரணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிம ற்றும் எஸ்.வி.புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடத்தியது. இந்த முகாம்களில் மொத்தம் 588 உப்பள தொழிலாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டத. இதில் 365 உப்பள தொழிலாளர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு கண்ணாடி வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
365 பேர்
தேர்வு செய்யப்பட்ட 365 பேருக்கும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி உப்பள தொழிலாளர்களுக்கு கண்ணாடியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, நலக்கல்வியாளர் அந்தோணிசாமி, அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.