சேலம் மாநகராட்சி அலுவலகம் முற்றுகை; 22 பேர் கைது

சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-28 20:45 GMT

சேலம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும், அதை கைவிட வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்களிடம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் மாநில தலைவர் கார்த்தி, மாவட்ட தலைவர் ஜெகநாதன் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் வேனில் ஏற்றி கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காவலில் வைத்தனர். பிறகு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்