சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
நெல்லை கொக்கிரகுளம் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லை கொக்கிரகுளம் நேதாஜி ரோட்டில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து புண்யாக வாசனம், கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன மகா விஷ்ணு ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகளும், இரவில் யந்திர ஸ்தாபனமும் நடந்தது.
நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து 8.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. அர்ச்சகர்கள் மகாதேவன், சுப்பிரமணியன், ஹரிசங்கர் ஆகியோர் பூஜைகளை நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.