சித்த வைத்தியர் லாரி மோதி பலி

சித்த வைத்தியர் லாரி மோதி பலியானார்.

Update: 2023-09-09 19:00 GMT

விராலிமலை தாலுகா ராஜாளிப்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50), சித்த வைத்தியர். இவர் நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்று கொண்டு இருந்தார். விராலிமலை- மணப்பாறை சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பழனிச்சாமியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்