மாநகராட்சி சார்பில் சித்த மருத்துவ முகாம்

மாநகராட்சி சார்பில் சித்த மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-04-29 19:13 GMT

கரூர் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சித்த மருத்துவ முகாம் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நடத்தப்பட உள்ளன. முதல் கட்டமாக முத்தலாடம்பட்டியில் நடைபெற்ற முகாமை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தொடங்கி வைத்தார்.முகாமில் மூட்டு, கழுத்து, முதுகு வலி, எலும்பு தேய்மானம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன. இதில், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், சித்த மருத்துவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்