குடகனாறு அணையில் ஷட்டர் பராமரிப்பு பணி நிறைவு

வேடசந்தூர் அருகே குடகனாறு அணையில் ஷட்டா் பராமரிப்பு பணி நிறைவடைந்தது

Update: 2022-09-11 18:24 GMT


வேடசந்தூர் அருகே அழகாபுரியில் குடகனாறு அணை அமைந்துள்ளது. இதன் உயரம் 27 அடி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து ஏற்படும். அங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அழகாபுரியில் உள்ள குடகனாறு அணைக்கு வந்து சேரும். இந்த அணையில் மொத்தம் 15 ஷட்டர்கள் உள்ளன.


இந்த நிலையில் ஷட்டர் பராமரிப்பு பணிக்காக, கடந்த மாதம் அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. பின்னர் பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றது. உதவி பொறியாளர் முருகன் தலைமையில் ஊழியர்கள் ஷட்டர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் ஷட்டர் பராமரிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக குடகனாறு அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அணையில் தற்போது 12 அடி வரை தண்ணீர் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்