ஊராட்சி எல்லையை மறு வரையறை செய்யாததை கண்டித்து கடையடைப்பு

லாலாபேட்டை ஊராட்சியின் எல்லையை மறு வரையறை செய்யாததை கண்டித்து லாலாபேட்டையில் கடை அடைப்பும், ராணிப்பேட்டையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது.

Update: 2023-04-10 18:03 GMT

கடையடைப்பு

ராணிப்பேட்டை மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லாலாபேட்டை ஊராட்சியின் எல்லையை மறு வரையறை செய்யக்கோரி லாலாபேட்டை பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று லாலாபேட்டை ஊராட்சியின் எல்லையை பூர்வீக சொத்துக்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடிப்படையில் மறுவறையை செய்யாமல் காலம் கடத்தும் அரசு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கண்டித்து லாலாபேட்டையில் உள்ள அனைத்து கடைகளையும் அடைத்து, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினர்.

உண்ணா விரதம்

அதேபோன்று ராணிப்பேட்டை முத்துக் கடையில் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

உண்ணாவிரத போராட்டத்தில் லாலாபேட்டை கிராமத்தில் உள்ள பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்