பொத்தனூரில்தேரோட்ட வீதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-05-20 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பொத்தனூர் பேரூராட்சியில் தேர் செல்லும் வீதிகளான நல்லாகி காட்டு தெரு, (கிழக்கு), பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் செல்லும் திருவள்ளுவர் சாலை, பொத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள வீரனம்பாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்