நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல், ராசிபுரம்
நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ.காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
ராசிபுரம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசபாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மோகனூர், எஸ்.வாழவந்தி
எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லை காட்டுபுதூர், தீர்த்தாம்பாளையம், பேட்டைபாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தகவல்களை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ஆனந்தபாபு, ராசிபுரம் சபாநாயகம், பரமத்திவேலூர் ராணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.