பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது

எலச்சிபாளையத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என சி.ஐ.டி.யு. வலியுறுத்தினர்.

Update: 2022-11-01 20:03 GMT

எலச்சிபாளையம்

எலச்சிபாளையத்தில் சி.ஐ.டி.யு. பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி பயணத்துக்கு தொழிற்சங்க மையத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சி.ஐ.டி.யு. வின் மாநில 15-வது மாநாடு கன்னியாகுமரியில் வருகிற 4-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மறைந்த தலைவர்களுக்கான நினைவு ஜோதி பயணம் சென்றது.

இந்தநிலையில் திருச்சி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பயணம் வந்தடைந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட உதவி செயலாளர் சுரேஷ், சி.ஐ.டி.யு. தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் வரவேற்றனர். அப்போது பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்ைத வாபஸ் பெற வேண்டும். நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ரெயில்வே தொழிற்சங்க செயல் தலைவர் ஜானகிராமன், நாமக்கல் மாவட்ட தலைவர் அசோகன், மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட உதவி செயலாளர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், கரூர் மாவட்ட செயலாளர் முருகேசன், கிருஷ்ணமூர்த்தி, ரெயில்வே சங்க தலைவர்கள் லெனின், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யு. நிர்வாகி சக்திவேல் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்