நெல் அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை

கூடலூர் பகுதியில் நெல் அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2022-10-26 18:45 GMT

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இரு போக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல்போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கூடலூர் பகுதிகளான வெட்டுக்காடு, கப்பா மடை, தாமரைகுளம், ஒட்டாண்குளம், பி.டி.ஆர்.வட்டம், பாரவர்தான், ஒழுகுவழி சாலை ஆகிய பகுதிகளில் முதல்போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கூடலூர் வெட்டுக்காடு, தாமரைகுளம் பகுதிகளில் நெல் அறுவடை பணி தொடங்கி உள்ளது. சாமி வாய்க்கால் பகுதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடைக்கு நெற்கதிர்கள் தயார்நிலையில் உள்ளது. ஆனால் கூடலூர் பகுதியில் நெல் அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறையாக உள்ளதால் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் ஒரு சில அறுவடை எந்திரங்கள் மட்டும் உள்ளதால் அதனை பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. எனவே கூடலூர் பகுதியில் வேளாண்துறை மூலம் அறுவடை எந்திரங்களை கொண்டு வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்