கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-06-16 22:00 GMT

பந்தலூர்

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தி, அதனை பயன்படுத்துபவர்கள், விற்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பந்தலூர் அருகே கொளப்பள்ளியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் எருமாடு பகுதியில் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் யுவராஜ், செந்தில்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  

Tags:    

மேலும் செய்திகள்