திருப்பூர் மங்கலம் சாலை சென்ட்ரல் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக புகையிலைப்பொருட்கள் விற்று வரும் கடைகளை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்ற டைமண்ட் தியேட்டர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் கருப்புசாமியின் (வயது 41) கடைக்கு நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சென்ட்ரல் போலீசார் சென்று ஆய்வு மேற்கொண்டு கடைக்கு 'சீல்' வைத்தனர். இதேபோல் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்ற மங்கலம் சாலை பழகுடோன் பகுதியில் வெங்கடேஷ் (38) நடத்தி வந்த பெட்டி கிடைக்கும், சந்தப்பேட்டை பகுதியில் ரகு (30) நடத்தி வந்த பெட்டி கிடைக்கும் நேற்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.