பாவூர்சத்திரத்தில் கடைகள் அடைப்பு
வணிகர் தினத்தையொட்டி பாவூர்சத்திரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.
பாவூர்சத்திரம்:
வணிகர் தினத்தையொட்டி பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்கம், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டு அனைவரும் ஈரோட்டில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ள சென்றனர். அதன்படி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் ஆர்.கே.காளிதாசன், காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் நாராயண சிங்கம், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய்சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் சென்று மாநாட்டில் கலந்து கொண்டனர். இதனால் பாவூர்சத்திரத்தில் நெல்லை-தென்காசி சாலையில் உள்ள கடைகள், காமராஜர் தினசரி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் பாவூர்சத்திரம் பஜார் மற்றும் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.