வணிகர் தினம்: சங்கரன்கோவிலில் கடைகள் அடைப்பு

வணிகர் தினத்தையொட்டி சங்கரன்கோவிலில் கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2023-05-05 18:45 GMT

சங்கரன்கோவில்:

வணிகர் தினத்தையொட்டி சங்கரன்கோவில் நகர வர்த்தக சங்கம் சார்பில் நகரில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்கள், பலசரக்கு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் நகைக்கடைகளும் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து வியாபாரிகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் நகர வர்த்தக சங்க தலைவர் முத்தையா, செயலாளர் குருநாதன், திருவள்ளுவர் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கே.எஸ்.சி.சண்முகம், திருவேங்கடம் சாலை வியாபாரிகள் சங்க செயலாளர் ராமர், நகைக்கடை உரிமையாளர்கள், வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்