புரட்டாசி மாத பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியில் இறைச்சி கடைகள் வெறிச்சோடின
புரட்டாசி மாத பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடின.
புரட்டாசி மாத பிறப்பையொட்டி கிருஷ்ணகிரியில் உள்ள இறைச்சி கடைகள் வெறிச்சோடின.
புரட்டாசி மாதம்
தமிழ் புரட்டாசி மாதமானது பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது இந்துக்களின் ஐதீகமாக உள்ளது. பெருமாளை வழிபடும் பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை உண்பதை தவிர்த்து, பெருமாளை வழிபட்டு விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி நேற்று புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி பெருமாள் பக்தர்கள் காலையிலேயே வழிபாடு நடத்தினர். இதற்கிடையே நேற்று வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிருஷ்ணகிரியில் இறைச்சி கடைகளில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வாங்குவதற்காக கூட்டம் அலைமோதும்.
விற்பனை மந்தம்
இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்ததையொட்டி கிருஷ்ணகிரியில் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இறைச்சி விற்பனை மந்த நிலையில் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.