போலீஸ் கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு
நெல்லையில் போலீஸ் கமிஷனரிடம் கடை வியாபாரிகள் மனு கொடுத்தனர்.
நெல்லையில் உள்ள உணவு பூங்காவில் கடை நடத்தி வந்தவர்கள் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், நாங்கள் கடைக்கு கொடுத்த முன்பணம் மற்றும் கடையில் உள்ள பொருட்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.