குற்றவாளியை கைது செய்யக்கோரி வியாபாரிகள் கடை அடைப்பு

லத்தேரியில் கத்தியால்குத்திய குற்றவாளியை கைது செய்யக்கோரி வியாபாரிகள் கடை அடைப்பு செய்தனர்.

Update: 2023-02-06 17:17 GMT

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரியை சேர்ந்தவர் எல்.எம்.பாபு. அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர். மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். லத்தேரி பஸ்நிலையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு லத்தேரி பஸ் நிலையத்தில் சுதாகர் என்பவருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கத்தியால் பாபுவை குத்தினார். அதைத் தடுக்க வந்த சுதாகரையும் கத்தியால் தாக்கிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து லத்தேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தப்பி ஓடிய மர்ம நபரை உடனே கண்டு பிடித்து கைது செய்யக்கோரி வியாபாரிகள் கடைஅடைப்பு போராட்டம் நடத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்