உற்பத்தி பொருட்களை விற்க அங்காடி மையம் சுயஉதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

உற்பத்தி பொருட்களை விற்க அங்காடி மையம் சுயஉதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2023-09-17 18:45 GMT


காளையார்கோவில், சிவகங்கை அரண்மனை வாசல், மற்றம் கீழடி ஆகிய இடங்களில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மதி அங்காடி

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், சிவகங்கை அரண்மனை வாசல், மற்றம் கீழடி ஆகிய இடங்களில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திடும் பொருட்டு மதி அங்காடி விற்பனை மையம் மகளிர் திட்டம் வாயிலாக அமைக்கப்படவுள்ளது

இந்த விற்பனை மையம் அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்பு பகுதியில் உள்ள சுயஉதவிக்குழு கூட்டமைப்பை சார்ந்தவர்கள் தங்கள் உற்பத்தி பொருளை விற்பனை செய்ய அங்காடி அமைக்க விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மகளிர் சுயஉதவிக்குழு, ஊராட்சி அளவிலான பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும், தேசிய ஊரக நகர்ப்புற வாழ்வாதார இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும்.

முன் அனுபவம்

பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவமுடையவராக இருத்தல் வேண்டும், சுயஉதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்து ஒரு வங்கிக்கடன் இணைப்பாவது பெற்று இருத்தல் வேண்டும். அங்காடியின் உரிமம் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்திடம் மட்டுமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் தேர்வு செய்யப்படும் சுயஉதவிக்குழு கூட்டமைப்பிற்கு 6 மாதங்களுக்கு வழங்கப்படும். பின்னர் சுழற்சி முறையிலும், விற்பனை மற்றும் திறன் அடிப்படையிலும் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.

மேலும், சுயஉதவிக்குழு மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட வட்டார மேலாளர் அல்லது சமுதாய அமைப்பாளரிடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பித்திட வேண்டும். மாற்றுதிறனாளி நலிவற்றோர் குழுக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்த கட்டிட வளாகம், வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகை அருகில், சிவகங்கை 630 562 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்