ஷூ கம்பெனி ஊழியர்கள் 100 நாள் வேலை தொழிலாளர்களாக உள்ளனர்

ஷூ கம்பெனி ஊழியர்கள் 100 நாள் வேலை தொழிலாளர்களாக உள்ளதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-09-01 17:55 GMT

பேரணாம்பட்டு ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் லலிதா டேவிட், ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் உத்திரகுமாரி, ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், பிரதீப்குமார், மீனா, லட்சுமி, ஒன்றிய பொறியாளர் சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பாஸ்கரன் (தி.மு.க.), செந்தில் (காங்), டில்லிராஜா (தி.மு.க.), அபிராமி (தி.மு.க.), செல்வகுமார் (காங்) ஆகியோர் பேசினர்.

ஹேமலதா (தி.மு.க.): பேசும்போது ஒன்றிய கவுன்சிலர்களை, ஊராட்சி செயலாளர்கள் மதிப்பதே இல்லை. அவர்கள் எந்த ஒரு தகவலும் சொல்வதும் இல்லை என்றார். மாவட்ட கவுன்சிலர் உத்திரகுமாரி ஷூ கம்பெனி தொழிலாளர்கள் 8 பேர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களாக உள்ளனர் என புகார் தெரிவித்தார். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆணையாளர் பாரி கூறினார்.

ஒன்றியக்குழு தலைவர் பேசுகையில் ஊராட்சி செயலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தை ஒன்றிய அளவில் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும். ஒன்றியக்குழு கூட்டத்திற்கு உளராட்சி செயலாளர்கள் வருவதில்லை. அவர்களுக்கு ஒன்றிய ஆணையாளர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என்றார்.

இதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் விவாதங்களுடன் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்