கல்விக்கடன் வசூலிக்க சென்ற வங்கி பெண் மேலாளர் மீது காலணியால் தாக்குதல்

ராஜபாளையத்தில் கல்விக்கடன் வசூலிக்க சென்ற வங்கி பெண் மேலாளர் மீது காலணியால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-29 18:48 GMT

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மெயின்ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் 32 வயது பெண், மேலாளராக பணியாற்றி வருகிறார்.இந்த வங்கியில் சம்பந்தபுரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் கல்விக்கடனாக ரூ.2 லட்சம் பெற்றுள்ளார்.நீண்ட காலமாக கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது பணம் தர முடியாது என தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர், திடீரென அந்த பெண் மேலாளரை காலணியால் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்