அரசு பேருந்தில் பிரேக் பிடிக்காததால் அதிர்ச்சி... ரவுண்டானாவில் மோதி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்
திருச்சியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, நேரடியாக ரவுண்டானா மீது மோதி விபத்து ஏற்பட்டது
திருச்சி,
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தில்லை நகர் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக பிரேக் கட் ஆனதால், ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, நீதிமன்றம் அருகே இருக்கக்கூடிய எம்ஜிஆர் சிலை ரவுண்டானாவில் நேரடியாக மோதி விபத்து ஏற்பட்டது
இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பேருந்தில் பயணம் செய்த நபர்களில் முன்புறம் அமர்ந்திருந்த ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்
இந்த விபத்து குறித்து கண்ட்ரோல்மென்ட் போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.