சிவசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா
சிவசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தத.
அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலூர் பாரதி நகரில் பிரசித்தி பெற்ற சிவசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு திருவிழா நேற்று தொடங்கியது.
இதையொட்டி நேற்று காலை குடகனாற்றில் இருந்து திரளான பக்தர்கள் புனிதநீர் மற்றும் காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தினமும் பக்தர்கள் அக்னி சட்டு எடுத்தும்,, அலகுகுத்தியும் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.