சிவலூர்சந்தன மாரியம்மனுக்கு வளைகாப்பு விழா

சிவலூர் சந்தன மாரியம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது.

Update: 2023-08-18 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே சிவலூர் காலனி சந்தன மாரியம்மன் கோவிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பூ, பழம், வளையல் உட்பட பல்வேறு சீர்வரிசை பொருட்களை கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு ஏழு வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்