சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
நெல்லையில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நடந்தது.இதில் தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்றார்
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்துக்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில வக்கீல் அணி இணை தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், உதயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பைபாஸ் சண்முகவேலன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சிவாஜி எம்.கலைமணி, மாவட்ட கலைப்பிரிவு தலைவர் கஸ்பர்ராஜ், சிவாஜி சமூகநல பேரவை மாவட்ட பொருளாளர் முப்புடாதி, ஐ.என்.டி.யு.சி. ஒருங்கிணைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.