சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு
சிவன் கோவில்களில் அஷ்டமி வழிபாடு நடந்தது.
நன்செய் புகழூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் அஷ்டமியையொட்டி சுவாமிக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் செம்பருத்தி பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் சிவன் கோவில்களில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.