சிவன் கோவில் தெப்பக்குளம் நிரம்பியது
சிவன் கோவில் தெப்பக்குளம் நிரம்பியது
திருவரங்குளம்:
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்த மழை காரணமாக சிவன் கோவில் தெப்பக்குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகின்றது.