சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆருத்ரா தரிசனத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-06 18:45 GMT

ஆருத்ரா தரிசனத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் அன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை கவீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கணபதி பூஜை, கலசஸ்தாபனம், கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், நடராஜ மூலமந்திர ஹோமம் ஆகியவை நடந்தது.

இதனிடையே நேற்று காலை சாமிக்கு விசேஷ திரவிய திருமஞ்சனம், திருவெம்பாவை உற்சவம், கோபுர தரிசனம், மகாதீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடந்தன. உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் வந்து பொதுமக்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைகள்

அதேபோல், கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. பார்வதி சமேதமாய் சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் வந்து சிவன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கிருஷ்ணகிரி புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சாமி நகர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள சிவன் கோவில்களில், ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்