சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு காப்பகம்

வேலூர் ஜெயிலில் பணியாற்றும் சிறை பணியாளர்களின் குழந்தைகளுக்கு காப்பகம் திறக்கப்பட்டது.

Update: 2023-09-12 18:48 GMT

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில், பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள், அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களின் குழந்தைகளுக்காக காப்பகம் பணியாளர்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் முன்னிலை வகித்தார். இதில் சிறை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், ஜெயிலில் பணியாற்றக்கூடிய பணியாளர்களின் குழந்தைகளுக்காக இந்த காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காப்பகம் டியூசன் சென்டர் போன்றும் செயல்படும். கல்வியுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்மார்ட் வகுப்பறை மூலம் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஓவியப்பயிற்சியும் வழங்கப்படும். பணியாளர்களுக்காக அங்கு சிறிய நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நாளிதழ்கள், புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்