அக்காள் கணவரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டு சிறை: பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு
பெரியகுளம் அருகே அக்காள் கணவரை கத்தியால் குத்திய வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்து பிரகாஷ் (வயது 26). இவரது அக்காள் ராமுத்தாய். இவரது கணவர் முத்தையா. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராமுத்தாய் கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி முத்துபிரகாஷ், முத்தையா இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முத்து பிரகாஷ் கத்தியால் முத்தையாவை குத்தினார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் முத்து பிரகாஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு பெரியகுளம் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மாரியப்பன், குற்றம் சாட்டப்பட்ட முத்து பிரகாசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.