சாந்தமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

கொள்ளிடம் அருகே சந்தப்படுகை சாந்தமுத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Update: 2023-06-06 18:45 GMT

கொள்ளிடம்:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் சாந்தமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் நடைபெறும் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீமிதி திருவிழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முதல் நாள் கொடியேற்று நிகழ்ச்சியும், பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 10 ம் நாளான நேற்றுமுன்தினம் காலை கொள்ளிடம் ஆற்றிலிருந்து பக்தர்கள் எடுத்து வந்த புனித நீரை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை பக்தர்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று கரகம்,காவடி, அலகு காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து வந்து கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். உள்ளூர் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்தப்படுகை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்