கள்ளக்குறிச்சி பகுதிசிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு

கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-03-04 18:45 GMT

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 4.30 மணிக்கு மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் பால்தேன், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், இளநீர், எலுமிச்சைச்சாறு, விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் வலம் கொண்டு வரப்பட்டார். நேற்று சனி பிரதோஷம் என்பதால் கள்ளக்குறிச்சி நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தென்கீரனூர் அண்ணாமலையார் கோவில், சங்கராபுரம் முதல் பாலமேடு காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில், அ.பாண்டலம் அமிர்தநாயகி ஸமேத ஆதிபுரீஸ்வரர் கோவில், சன்னதி தெரு மணிமங்களநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர் கோவில், மூக்கனூர் தாண்டுவனேஸ்வரர், மஞ்சபுத்தூர் கைலாசநாதர், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் உள்பட கள்ளக்குறிச்சி பகுதிக்குட்பட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்